ஈழ நாட்டில் தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறினார்கள். தமிழகத்தோடு எப்போதும் தொடர்பு கொண்டிருந்தார்கள். தமிழையும் தமிழர் நாகரிகத்தையும் சமயத்தையும் வளர்த்தார்கள்.
சில காலமாகத் தமிழ் மறுமலர்ச்சி என்பது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம். தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் என்று பலருடைய பெயர்களும் சொல்லப்படுகின்றன. ஆனால் உண்மையில் தமிழ் மறுமலர்ச்சிக்கு ஆதிகாரண புருஷர் யார் என்று ஆராய்ந்து பார்த்தோமானால் அவர் ஈழ நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ ஆறுமுக நாவலர் என்பது தெரியவரும்.
பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையைவிட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி பெரியார் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்.
ஆதாரம்: அமரர் கல்கி, யார் இந்த மனிதர்கள்? (கட்டுரைத் தொகுதி), வானதி பதிப்பகம், அக்டோபர் 1998
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக