அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

திங்கள், 19 செப்டம்பர், 2011

திங்கள், 19 செப்டெம்ப்ர், 2011

குரங்கணில்முட்டம் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : வாலீஸ்வரர், கொய்யாமலர்நாதர்

அம்மன்/தாயார் : இறையார்வளையம்மை

தல விருட்சம் :
இலந்தை ஊர் : குரங்கணில்முட்டம்

தீர்த்தம் : காக்கைமடு தீர்த்தம், வாயசை தீர்த்தம்

கமம்/பூஜை : காமீகம் மாவட்டம் : திருவண்ணாமலை

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர் தேவார பதிகம் சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் காலன்றனை ஆருயிர் வவ்விய காலன் கோலப் பொழில் சூழ் குரங்கணில் முட்டத் தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. -திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற காவிரி தொண்டை நாட்டுத் தலங்களில் இது 6வது தலம்.

திருவிழா:

திருக்கார்த்திகையில் லட்சதீபம், சிவராத்திரி, அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இங்கு வாலீஸ்வரர் சுயும்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார்


.
இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது.

திறக்கும் நேரம்:


காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

முகவரி:

அருள்மிகு வாலீஸ்வரர் கோயில் அர்ச்சகர், தூசி போஸ்ட், மாமண்டூர் வழி, குரங்கணில்முட்டம் - 631 702. திருவண்ணாமலை மாவட்டம்.

போன்:

91- 44- 2724 20158, 99432 -

பொது தகவல்:

பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், பைரவர், நவக்கிரகங்கள், சப்தமாதர், நாகதேவதை ஆகியோர் இருக்கின்றனர். கருவறைக்கு பின்புறத்தில் மகாவிஷ்ணு, பிரயோக சக்கரத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

பிரார்த்தனை:

பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரவும், சனி தோஷம் நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இங்குள்ள அம்பாளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர்.வாலீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் குறைவில்லாத வாழ்வும், பிறப்பில்லாத நிலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

கொய்யாமலர் நாதர்: சுவாமி சுயும்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. குரங்கு வடிவில் வந்த வாலி, சிவனை வணங்கியபோது அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு "கொய்யா மலர் நாதர்' (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு.

இவருக்கு விசேஷமாக கரும்புச்சாறு அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் என்றும் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர்.

வளையல் அணிந்த அம்பாள்: இங்குள்ள அம்பாள் பெயர் "இறையார்வளையம்மை'. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்களாம். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாளாம். எனவே, அம்பாளுக்கு இப்பெயர் வந்ததாம்.

அதாவது, தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கின்றனர். சம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். இவள் கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு.

முக்தி தலம்:

சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். இத்தீர்த்தத்தை, "காக்கைமடு தீர்த்தம்', "வாயசை தீர்த்தம்' என்கின்றனர்.

எமன், சனீஸ்வரருக்கு அதிபதி. எனவே, சனி தோஷங்கள் நீங்க எமன் வழிபட்ட வாலீஸ்வரரையும், நவக்கிரகத்தில் உள்ள
சனீஸ்வரரையும் வழிபடலாம். திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை, "குரங்கணின்முட்டம்' என்றும், "பறவா வகை வீடு' (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள்.

தல வரலாறு:

தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார்.

தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் சிவன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.

கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், "தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும்' கூறினார்.

அவரது சொல்கேட்ட இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர்.

சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் "குரங்கு அணில் முட்டம்' என்றானது. கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது

பைரவ தீபப் பொடியின் செய்முறை

 போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக
அனைத்து கர்மாக்களை விலக்கும் பைரவர் ஆசி பெற போகர் அருளிய தீபம் ஏற்றும் தெய்வீக திரவியப்பொடி, 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள், பைரவ தீபப் பொடியின் செய்முறை, பலன்கள் பின்வருமாறு
வ. எண்நட்சத்திரங்கள்பைரவர்அருள்தரும் தலம்
1.அசுவினிஞானபைரவர்பேரூர்
2.பரணிமகாபைரவர்பெரிச்சியூர்
3.கார்த்திகைஅண்ணாமலை பைரவர்திருவண்ணாமலை
4.ரோகிணிபிரம்ம சிரகண்டீஸ்வரர்திருக்கண்டியூர்
5.மிருகசிரிஷம்க்ஷேத்திரபாலர்க்ஷேத்ரபாலபுரம்
6.திருவாதிரைவடுக பைரவர்வடுகூர்
7.புனர்பூசம்விஜய பைரவர்பழனி
8.பூசம்ஆஸின பைரவர்ஸ்ரீவாஞ்சியம்
9.ஆயில்யம்பாதாள பைரவர்காளஹஸ்தி
10.மகம்நர்த்தன பைரவர்வேலூர்
11.பூரம்பைரவர்பட்டீஸ்வரம்
12.உத்திரம்ஜடாமண்டல பைரவர்சேரன்மகாதேவி
13.அஸ்தம்யோகாசன பைரவர்திருப்பத்தூர்
14.சித்திரைசக்கரபைரவர்தர்மபுரி
15.சுவாதிஜடாமுனி பைரவர்பொற்பனைக்கோட்டை
16.விசாகம்கோட்டை பைரவர்திருமயம்
17.அனுஷம்சொர்ண பைரவர்சிதம்பரம்
18.கேட்டைகதாயுத பைரவர்சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19.மூலம்சட்டைநாதர்சீர்காழி
20.பூராடம்வீரபைரவர்அவிநாசி, ஒழுகமங்கலம்
21.உத்திராடம்முத்தலைவேல் வடுகர்கரூர்
22.அவிட்டம்பலிபீடமூர்த்திசீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23.திருவோணம்மார்த்தாண்ட பைரவர்வயிரவன் பட்டி
24.சதயம்சர்ப்ப பைரவர்சங்கரன்கோவில்
25.பூரட்டாதிஅஷ்டபுஜபைரவர்கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26.உத்திரட்டாதிவெண்கலஓசை பைரவர்சேஞ்ஞலூர்
27.ரேவதிசம்ஹார பைரவர்தாத்தையாங்கார்பேட்டை
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.
செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.
மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:
பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
க் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக
அனைத்து கர்மாக்களை விலக்கும் பைரவர் ஆசி பெற போகர் அருளிய தீபம் ஏற்றும் தெய்வீக திரவியப்பொடி, 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள், பைரவ தீபப் பொடியின் செய்முறை, பலன்கள் பின்வருமாறு
வ. எண்நட்சத்திரங்கள்பைரவர்அருள்தரும் தலம்
1.அசுவினிஞானபைரவர்பேரூர்
2.பரணிமகாபைரவர்பெரிச்சியூர்
3.கார்த்திகைஅண்ணாமலை பைரவர்திருவண்ணாமலை
4.ரோகிணிபிரம்ம சிரகண்டீஸ்வரர்திருக்கண்டியூர்
5.மிருகசிரிஷம்க்ஷேத்திரபாலர்க்ஷேத்ரபாலபுரம்
6.திருவாதிரைவடுக பைரவர்வடுகூர்
7.புனர்பூசம்விஜய பைரவர்பழனி
8.பூசம்ஆஸின பைரவர்ஸ்ரீவாஞ்சியம்
9.ஆயில்யம்பாதாள பைரவர்காளஹஸ்தி
10.மகம்நர்த்தன பைரவர்வேலூர்
11.பூரம்பைரவர்பட்டீஸ்வரம்
12.உத்திரம்ஜடாமண்டல பைரவர்சேரன்மகாதேவி
13.அஸ்தம்யோகாசன பைரவர்திருப்பத்தூர்
14.சித்திரைசக்கரபைரவர்தர்மபுரி
15.சுவாதிஜடாமுனி பைரவர்பொற்பனைக்கோட்டை
16.விசாகம்கோட்டை பைரவர்திருமயம்
17.அனுஷம்சொர்ண பைரவர்சிதம்பரம்
18.கேட்டைகதாயுத பைரவர்சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19.மூலம்சட்டைநாதர்சீர்காழி
20.பூராடம்வீரபைரவர்அவிநாசி, ஒழுகமங்கலம்
21.உத்திராடம்முத்தலைவேல் வடுகர்கரூர்
22.அவிட்டம்பலிபீடமூர்த்திசீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23.திருவோணம்மார்த்தாண்ட பைரவர்வயிரவன் பட்டி
24.சதயம்சர்ப்ப பைரவர்சங்கரன்கோவில்
25.பூரட்டாதிஅஷ்டபுஜபைரவர்கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26.உத்திரட்டாதிவெண்கலஓசை பைரவர்சேஞ்ஞலூர்
27.ரேவதிசம்ஹார பைரவர்தாத்தையாங்கார்பேட்டை
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.
செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.
மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:
பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

பயம் போக்கும் பைரவர்

பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனியின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். அதனால், சனியின் இம்சை குறையும், எதிரிகள் அழிவர். பில்லி, சூனியம் அகலும்; வழக்குகளில் வெற்றி காணலாம். கார்த்திகை வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாள் ஆகும். காசியின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்தது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளில், சூலமும், உடுக்கையும், மழுவும், பாசக் கயிறும் கைகளில் ஏந்திய கால பைரவரது வாகனம் நாய்.

நெல்லை மாவட்டம், குற்றாலம் செங்கோட்டை பாதையில் உள்ள இலஞ்சி எனும் ஊரில் குமரன் கோயிலில் அருள் புரியும் பைரவரது வாகனமான நாய், இடப் பக்கம் திரும்பி இருப்பது சிறப்பு அம்சம் என்கிறார்கள்.

நெல்லையப்பர் கோயிலில் (திருநெல்வேலி) அருள் புரியும் பைரவர், ஆறு கரங்களுடன் பல வித ஆயுதங்கள் தாங்கி, சாந்த முகத்துடன் திகழ்கிறார். சங்கரன்கோவில் சிவன் கோயிலில், நின்ற கோலத்தில் செங்குத்தாக பாம்பை கையில் ஏந்திய பைரவரை சர்ப்ப பைரவர் என்கிறார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 8 கைகளுடன் 3 கண்கள் கொண்ட ஐம்பொன்னாலான பைரவரது உற்சவர் சிலையை தரிசிக்கலாம். காரைக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில், பைரவர் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிறார்.

தஞ்சை பெரிய கோயிலில் அருள் பாலிக்கும் பைரவர் 8 கரங்களுடன் காட்சி தருகிறார். சிருங்கேரியில் மூன்று கால்கள் உள்ள பைரவர் அருள் புரிகிறார். திருவண்ணாமலையில் மேற்கு முகமாக, நின்ற கோலத்தில் 8 கரங்களுடன், 7 அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார் பைரவர்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில், 8 கரங்களுடன், ஜடாமண்டல கால பைரவர் அருள் புரிகிறார். கும்பகோணம் திருவாரூர் சாலையில் உள்ள சிவபுரம் சிவகுருநாதன் கோயிலில் நின்ற கோலத்தில் கோரைப் பற்கள் மற்றும் பயங்கர உருவத்துடன், கையில் சூலாயுதம் தாங்கி அருள் புரிகிறார் பைரவர். வாகனமான நாய், இடப்புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள திருவிசலூர் தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

ஸ்ரீ பைரவர்

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு


இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்தி பேதங்களில், பைரவரும் ஒருவர். சிவாம்சமான பைரவமூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கண்கள், சர்ப்ப ஆபரணம், குண்டலம்,சிரஸில் மாலை, கட்கம், சூலம், உடுக்கை,கோரப்பல், நாய்வாகனம், இவரே பைரவர்.


சுவானத்வஜாய வித்மஹோ

சூலஹஸ்தய தீ மஹி

தந்தோ பைரவ ப்ரசோதயாத்


என்ற பைரவ காயத்ரி மந்திரத்தை ஆசாரத்துடன் தகுந்த குருநாதர் மூலம் உபதேசம் பெற்று பைரவ உபாஸணையில் ஈடுபடலாம். வாக்தேவியின் அருளுடன் கூடிய இவர் கேட்பதைத் தரும் இயல்புடையவர். நமது ஆலயங்களில் பைரவருக்கு தனிச் சன்னிதி உண்டு.


உதயகால பூஜை தொடங்கும் முன்னும் இரவு அர்த்தஜாம பூஜைக்குப் பின்னும் பைரவரை பூஜை செய்து, கோயில் காவலை பைரவரிடம் ஒப்படைப்பது வழக்கம். பைரவர் காவல் தெய்வம் பைரவாஷ்டகம் பைரவ அஷ்டோத்ரம், கால பைரவாஷ்டகம், இவைகள் நித்ய பாராயத்திற்கு ஏற்றவை. பைரவரை அஷ்ட பைரவர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.


அவை கால பைரவர்,கல்பாந்த் பைரவர், க்ரோதந பைரவர், கபாலபைரவர், ஸம்ஹார பைரவர், உந்மத்த பைரவர், சண்ட பைரவர், உக்ர பைரவர் ஆகியவை. திருவண்ணாமலை, பட்டீஸ்வரம் முதலிய ஆலயங்களில் பைரவரின் சிற்பம் மிகவும் அழகானது


பைரவர் ஆட்சி செய்யும் காசி:


காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.


பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்த போது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம் பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர்.


காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில் தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும்,லாட் பஜாரில் கபால பைரவர் யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும்,ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும்,பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும்,திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும்,பூத பைரவரத்தில் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்டபைரவரும் அஷ்டதிக்கிலும் எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.


அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த் தனை கிடையாது. பைரவ வாதணை நிச்சயம் உண்டு. காசி மாநகர எல்லையை தொடும்போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம்.
அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது
காசி கறுப்பு கயிறு அணியும்போது ஆயுள் விருத்தியாகிறது. எமபயம் நீங்க, எமவாதனை நீங்க காசி கால பைரவாஷ்டகத்துடன் காசி கறுப்பு கயிறு அணிந்து வளம்பெறுவோம்

செவ்வாய், 17 மே, 2011

தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!

உயிர்கள்
இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும்
பெறுவதற்கு சிவபூஜை மிகச் சிறந்ததாகும். தீவினைகளை அகற்றி சகல நன்மைகளையும்
அளிக்க வல்லவர் சிவபெருமான். அந்த சிவபெருமானை கீழ்க்கண்ட ஸ்லோகத்தால்
தினமும் வழிபட்டால் தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் சேரும்.


ஸ்ரீசிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய

ஜ்ஞாநப்ரதாய கருணாம்ருத ஸாகராய/

கற்பூர குந்த தவலாய ஜடாதராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//


லோகோத்தராய புஜகாதிப கங்கணாய

கங்காதராய கஜதாநவ மர்தநாய/

கௌரீ ப்ரியாய சசிபால கலாதராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//


பாநுப்ரியாய பவஸாகர நாசநாய

காமாந்தகாய கமலாப்ரிய பூஜிதாய/

நேத்ரத்ரயாய சுபலக்ஷண ஸம்ஸ்திதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பக்தப்ரியாய பவரோக பயாவஹாய

திவ்யாத்ரி திவ்யபவநாய குணார்ணவாய/

தேஜோமயாய நிகிலாகம ஸம்ஸ்துதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



சர்மாம்பராய சவபஸ்ம விலேபநாய

பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய/

மஞ்ஜீரபாத யுகலாய வ்ருஷத்வஜாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய

ஸ்வர்காபவர்க பலதாய மகேஸ்வராய/

ஹேமாம்சுகாய புவநத்ரய வந்திதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



முக்தாய யக்ஞபலதாய கணேஸ்வராய

கீதப்ரியாய வ்ருஷபேஸ்வர வாஹநாய/

மாதங்க சர்மவஸநாய மஹேஸ்வராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய

புண்யாய புண்யசரிதாய ஸுரேஸ்வராய/

நந்திப்ரியாய நகராஜ ஸுதாப்ரியாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பக்த்யாச துக்க தஹநாஷ்டக மீஸ்வரஸ்ய

ஸங்கீர்தயேத் புரத ரவ பிநாகபாணே/

யஸ்தஸ்ய ஸைலஸீதயா பரிரப்த தேஹோ

ருத்ரோ ததாத்யம்ருத மிஷ்ட மநந்தலக்ஷம்//

மங்களம்.

ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை

ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை !!!! ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு  சரணம் சரணம் 






காப்பு   ஆக்கும் தொழில் ஐங்கரனாற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !



வைரம்
  கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுக் கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



நீலம்
  மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



முத்து
  முத்தே வருமுத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும்  முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாஸினியே  சரணம்
தந்தே யறிநான்  தனயன் தாய்நீ
சாகா தவரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணைவாழ் வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



பவளம்
  அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னம் நடை செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழி யாரோ
தேம்பொழி லாமிது செய்தவ ளாரோ
எந்தையிடத்து  மனத்தும் இருப்பாள்
எண்ணு வர்க்கருள் எண்ண மிகுந்தாள்
   மந்திர வேத மயப் பொரு ளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



மாணிக்கம்
  காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலி வானவளே
புனையக் கிடையாப் புதுமையானவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



மரகதம்
  மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி  லயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழம
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ  நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



கோமேதகம்
  பூமே வியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி யெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்
கோமே தகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமே ருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



பதுமராகம்
  ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராகலி சாஸவி யாமினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேஸ ச்ருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



[b]வைடூரியம் [/b]
  வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையா றொலியொத்  தவிதால்
நிலையற் றெளியேன்  முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற்றது பூதி பெரும்
அடியாற் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
   மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !



நூற் பயன்
  எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி யெல்லாம்
சிவரத்தினமாய்த் திகழ்வாரவாரே !!!!

செவ்வாய், 17 மே, 2011

தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!

உயிர்கள்
இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும்
பெறுவதற்கு சிவபூஜை மிகச் சிறந்ததாகும். தீவினைகளை அகற்றி சகல நன்மைகளையும்
அளிக்க வல்லவர் சிவபெருமான். அந்த சிவபெருமானை கீழ்க்கண்ட ஸ்லோகத்தால்
தினமும் வழிபட்டால் தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் சேரும்.


ஸ்ரீசிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய

ஜ்ஞாநப்ரதாய கருணாம்ருத ஸாகராய/

கற்பூர குந்த தவலாய ஜடாதராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//


லோகோத்தராய புஜகாதிப கங்கணாய

கங்காதராய கஜதாநவ மர்தநாய/

கௌரீ ப்ரியாய சசிபால கலாதராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//


பாநுப்ரியாய பவஸாகர நாசநாய

காமாந்தகாய கமலாப்ரிய பூஜிதாய/

நேத்ரத்ரயாய சுபலக்ஷண ஸம்ஸ்திதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பக்தப்ரியாய பவரோக பயாவஹாய

திவ்யாத்ரி திவ்யபவநாய குணார்ணவாய/

தேஜோமயாய நிகிலாகம ஸம்ஸ்துதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



சர்மாம்பராய சவபஸ்ம விலேபநாய

பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய/

மஞ்ஜீரபாத யுகலாய வ்ருஷத்வஜாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய

ஸ்வர்காபவர்க பலதாய மகேஸ்வராய/

ஹேமாம்சுகாய புவநத்ரய வந்திதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



முக்தாய யக்ஞபலதாய கணேஸ்வராய

கீதப்ரியாய வ்ருஷபேஸ்வர வாஹநாய/

மாதங்க சர்மவஸநாய மஹேஸ்வராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய

புண்யாய புண்யசரிதாய ஸுரேஸ்வராய/

நந்திப்ரியாய நகராஜ ஸுதாப்ரியாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பக்த்யாச துக்க தஹநாஷ்டக மீஸ்வரஸ்ய

ஸங்கீர்தயேத் புரத ரவ பிநாகபாணே/

யஸ்தஸ்ய ஸைலஸீதயா பரிரப்த தேஹோ

ருத்ரோ ததாத்யம்ருத மிஷ்ட மநந்தலக்ஷம்//

மங்களம்.

ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை

காப்பு ஆக்கும் தொழில் ஐங்கரனாற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !








வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுக் கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








முத்து
முத்தே வருமுத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாஸினியே சரணம்
தந்தே யறிநான் தனயன் தாய்நீ
சாகா தவரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணைவாழ் வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








பவளம்
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னம் நடை செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழி யாரோ
தேம்பொழி லாமிது செய்தவ ளாரோ
எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்
எண்ணு வர்க்கருள் எண்ண மிகுந்தாள்
மந்திர வேத மயப் பொரு ளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








மாணிக்கம்
காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலி வானவளே
புனையக் கிடையாப் புதுமையானவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழம
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








கோமேதகம்
பூமே வியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி யெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்
கோமே தகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமே ருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராகலி சாஸவி யாமினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேஸ ச்ருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








[b]வைடூரியம் [/b]
வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையா றொலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற்றது பூதி பெரும்
அடியாற் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








நூற் பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி யெல்லாம்
சிவரத்தினமாய்த் திகழ்வாரவாரே !!!!

புத்திர லாபம் மற்றும் ஸர்வ பாக்கியங் களைத் பெற


புதன், 4 மே, 2011

சைவம்

சைவம்












சைவம் என்பது சிவசம்பந்தமுடையது. தில சம்பந்தமுடையது தைலம். சிலா சம்பந்தமுடையது சைலம். அதுபோல் சிவ சம்பந்தமுடையது சைவம். எனவே சிவம் என்று உளதோ அன்றே சைவம் உளது. ஆகவே தொன்மையும் நன்மையும் படைத்தது. ஏனைய சமயங்கள் ஒவ்வொரு குருமார்களால் தோன்றியவை. அதனால் அந்த சமயங்கள் அந்தந்த குருமாரகளின் பெயர்களாலேயே அமைந்துள்ளன. சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது. இச்சமயத்தின் பெருமையை அநுபூதிமானாகிய தாயுமானவர அருளிச் செய்த தண்டமிழ் வாக்கால் அறிக.

"சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே"


எல்லா உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் கோயில்களே ஆகும். இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கின்றான்.ஆகவே சைவ சமயத்தைக் கடைப்பிடிப்போர்கள் எனது யான் என்ற இரண்டையும் தள்ள வேண்டும். எவரும் யாரும் யான் எனக் கொள்ள வேண்டும். இது தான் எல்லா நூல்களின் முடிந்த முடிவு. ஆன்றோரின் அநுபவ உண்மை. இந்த அநுபவம் வாய்க்கப் பெறாதவர் வானுயர் கோலம் கொள்ளினும் தேனெனும் கலைகள் கற்பினும் பயனில்லை. இதனைப் பரம அநுபவ ஞானியான அருணகிரிநாதர் இரண்டு வரிகளில் உபதேசிக்கின்றார்.

எனதி யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
இதய பாவனா தீதம் அருள் வாயே
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகு புகும்.

எனத் திருவள்ளுவரும் திருவாய் மலர்ந்தருளுகின்றார். எனவே சைவசமயிகள், எனது யான் என்ற புறப்பற்றையும் அகப்பற்றையும் அறவே களைந்து, இறைவனைத் தன்னுள் கண்டு, எல்லாப் பொருள்களிலும் அப்பரமனைக் கண்டு, அது அதுவாய் ஒன்றுபட்டு நின்று, அவ்விறைபணியில் வழுவாது நின்று, மும்மலங்களும் நீங்க, இறைவன் செம்மலர் நிழலில் ஓங்கிப் பேரானந்தப் பெருவாழ்வில் திளைத்தல் வேண்டும்.

அவனே தானே யாகிய வந்நெறி ஏகனாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே


என்று சிவஞானபோதம் 10 வது சூத்திரம் உபதேசிக்கின்றது. ஆகவே சைவ சமயம் அருமையும் எளிமையும் உடையது. இதில் உள்ள உண்மைகள் எல்லோரும் ஒப்ப முடிந்தது. முடிந்த முடிவு சைவ சித்தாந்தம் ஆகும்.

இப்புனித மனிதப் பிறவியெடுத்த நாம் அனைவரும் சைவ சமய நெறி நின்று ஈடேறும் வண்ணம், இச்சமய உண்மைகளை உபதேசித்த குரவரகள் நால்வர். தாவில் சராசரமெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் புரிந்தார் என்ற திருவாக்கின்படி சம்பந்தர் முதலிய நால்வர் சிவம் பெருக்க வந்தவரகள். அவர்கள் பாடித்தந்த தேவார திருவாசகங்களும் ஏனைய ஆன்றோர்கள் பா;டிய அருள் நூல்களும், ஆக பன்னிரு திருமுறைகள் தோத்திரங்கள். மெய்கண்டார் முதலிய நால்வர் நம்பொருட்டு உணர்த்தியருளிய சாத்திரங்கள் பதினான்கு. தோத்திரங்கள் 12. சாத்திரங்கள் 14. சைவ சமயிகள் இவற்றைப் பெற்றுப் பூசித்து வாசித்துப் பெருநலம் பெறவேண்டும். எங்கும் சிவத்தைக் காணவேண்டும். தவத்தைச் செய்ய வேண்டும். எம்மதத்தையும் பழிக்கக் கூடாது.













விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்.

என்பது அப்பர் திருவாக்கு. எச்சமயத்தினர் எத்தேவரை வணங்கினாலும் அத்தேவராக நின்று அருள் புரியும் முழுமுதற் பரம்பொருள் சிவமேயாகும்.

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்".

என்பது சிவஞான சித்தியார். ஆதலால் அமைதியுள்ள மனதுடன் சைவ சமயிகள் வாழவேண்டும். சைவத்திற்கே உரிய பண்பு பணிவு.

தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயஞ் சாரும் ஊழ் பெறல் அரிது.

என்கின்றார் அருணந்தி தேவர். சிவமே பொருள். அவரைச் சேரும் நெறி அன்பே. நமக்குப் பகை பிறவியே. அருட் கண்ணாலே சிவத்தைக் கண்டு களிக்க வேண்டும்.

ஓதி நூல்கோடி யுணர்ந்து உணரார்கள்பாதி வெண்பாவி
ல் பகரக்கேள் -ஆதி
சிவமே பொருள் அதனைச் சேரும்நெறியன்பே பவமே பகை அருளாற் பார்.


சைவம்












சைவம் என்பது சிவசம்பந்தமுடையது. தில சம்பந்தமுடையது தைலம். சிலா சம்பந்தமுடையது சைலம். அதுபோல் சிவ சம்பந்தமுடையது சைவம். எனவே சிவம் என்று உளதோ அன்றே சைவம் உளது. ஆகவே தொன்மையும் நன்மையும் படைத்தது. ஏனைய சமயங்கள் ஒவ்வொரு குருமார்களால் தோன்றியவை. அதனால் அந்த சமயங்கள் அந்தந்த குருமாரகளின் பெயர்களாலேயே அமைந்துள்ளன. சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது. இச்சமயத்தின் பெருமையை அநுபூதிமானாகிய தாயுமானவர அருளிச் செய்த தண்டமிழ் வாக்கால் அறிக.

"சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே"


எல்லா உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் கோயில்களே ஆகும். இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கின்றான்.ஆகவே சைவ சமயத்தைக் கடைப்பிடிப்போர்கள் எனது யான் என்ற இரண்டையும் தள்ள வேண்டும். எவரும் யாரும் யான் எனக் கொள்ள வேண்டும். இது தான் எல்லா நூல்களின் முடிந்த முடிவு. ஆன்றோரின் அநுபவ உண்மை. இந்த அநுபவம் வாய்க்கப் பெறாதவர் வானுயர் கோலம் கொள்ளினும் தேனெனும் கலைகள் கற்பினும் பயனில்லை. இதனைப் பரம அநுபவ ஞானியான அருணகிரிநாதர் இரண்டு வரிகளில் உபதேசிக்கின்றார்.

எனதி யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
இதய பாவனா தீதம் அருள் வாயே
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகு புகும்.

எனத் திருவள்ளுவரும் திருவாய் மலர்ந்தருளுகின்றார். எனவே சைவசமயிகள், எனது யான் என்ற புறப்பற்றையும் அகப்பற்றையும் அறவே களைந்து, இறைவனைத் தன்னுள் கண்டு, எல்லாப் பொருள்களிலும் அப்பரமனைக் கண்டு, அது அதுவாய் ஒன்றுபட்டு நின்று, அவ்விறைபணியில் வழுவாது நின்று, மும்மலங்களும் நீங்க, இறைவன் செம்மலர் நிழலில் ஓங்கிப் பேரானந்தப் பெருவாழ்வில் திளைத்தல் வேண்டும்.

அவனே தானே யாகிய வந்நெறி ஏகனாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே


என்று சிவஞானபோதம் 10 வது சூத்திரம் உபதேசிக்கின்றது. ஆகவே சைவ சமயம் அருமையும் எளிமையும் உடையது. இதில் உள்ள உண்மைகள் எல்லோரும் ஒப்ப முடிந்தது. முடிந்த முடிவு சைவ சித்தாந்தம் ஆகும்.

இப்புனித மனிதப் பிறவியெடுத்த நாம் அனைவரும் சைவ சமய நெறி நின்று ஈடேறும் வண்ணம், இச்சமய உண்மைகளை உபதேசித்த குரவரகள் நால்வர். தாவில் சராசரமெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் புரிந்தார் என்ற திருவாக்கின்படி சம்பந்தர் முதலிய நால்வர் சிவம் பெருக்க வந்தவரகள். அவர்கள் பாடித்தந்த தேவார திருவாசகங்களும் ஏனைய ஆன்றோர்கள் பா;டிய அருள் நூல்களும், ஆக பன்னிரு திருமுறைகள் தோத்திரங்கள். மெய்கண்டார் முதலிய நால்வர் நம்பொருட்டு உணர்த்தியருளிய சாத்திரங்கள் பதினான்கு. தோத்திரங்கள் 12. சாத்திரங்கள் 14. சைவ சமயிகள் இவற்றைப் பெற்றுப் பூசித்து வாசித்துப் பெருநலம் பெறவேண்டும். எங்கும் சிவத்தைக் காணவேண்டும். தவத்தைச் செய்ய வேண்டும். எம்மதத்தையும் பழிக்கக் கூடாது.













விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்.

என்பது அப்பர் திருவாக்கு. எச்சமயத்தினர் எத்தேவரை வணங்கினாலும் அத்தேவராக நின்று அருள் புரியும் முழுமுதற் பரம்பொருள் சிவமேயாகும்.

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்".

என்பது சிவஞான சித்தியார். ஆதலால் அமைதியுள்ள மனதுடன் சைவ சமயிகள் வாழவேண்டும். சைவத்திற்கே உரிய பண்பு பணிவு.

தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயஞ் சாரும் ஊழ் பெறல் அரிது.

என்கின்றார் அருணந்தி தேவர். சிவமே பொருள். அவரைச் சேரும் நெறி அன்பே. நமக்குப் பகை பிறவியே. அருட் கண்ணாலே சிவத்தைக் கண்டு களிக்க வேண்டும்.

ஓதி நூல்கோடி யுணர்ந்து உணரார்கள்பாதி வெண்பாவி
ல் பகரக்கேள் -ஆதி
சிவமே பொருள் அதனைச் சேரும்நெறியன்பே பவமே பகை அருளாற் பார்.

கையெழுத்து

  தமிழில் போட்ட கையெழுத்து


‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரும், இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் எப்படி இவ்வெளிய நடையில், அழகு தமிழில் திருவாசகத்தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர்.
பேரருட்பெரியவர்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் 63 பேர். சமயக்குரவர் நால்வர்-அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆவர். திருவாசகம் செந்தமிழுக்கு அன்பு மறையாகவும், உயிர்ப்பிணிக்கு மருந்தாகவும் உள்ளது. அப்பர் சரியைக்கும், சம்பந்தர் கிரியைக்கும், சுந்தரர் யோகத்திற்கும், மாணிக்கவாசகர் ஞானத்திற்கும் உரியவராக எண்ணப்படுவர்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
மாணிக்கவாசகர் மதுரைக்காரர். பெயர் வாதவூரர். மாணிக்கவாசகர் ஏறத்தாழ 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். இவர் ஐப்பசி விசாகத்தில் பிறந்தாரென கீழ்க்கண்ட செய்யுள் மூலம் தெரியவருகிறது.
சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாசகனார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே.
ஆதி சங்கரரைப் போல 32 ஆண்டுகளே வாழ்ந்தார் மாணிக்கவாசகர்.
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம்-இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி. – (மாணிக்கவாசகர் அகவல்)
அப்பருக்கு 81, வாதவூரர்க்கு 32, சுந்தரருக்கு 18, ஞான சம்பந்தருக்கு 16 வயதில் முக்தி.
வைகைகரையில் திருவாதவூரில் அமாத்தியர் எனும் அந்தணர் மரபில் சம்புபாதசிருதர், சிவஞானவதிக்குப் புதல்வராகத் தோன்றியவர். மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சர். தென்னவன் பிரமராயர் என்ற பட்டம் பெற்றவர்.
சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந்துள்ள செய்தி கேட்ட மன்னன், வாதவூரரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். வாதவூரர் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார். சோலை ஒன்றில் சிவாகமங்கள், வேதங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூரர் அங்கே சென்று, சிவனே குருநாதர் தோற்றத்தில் மரத்தடியில் வீற்றிருக்க, கீழே அடியார்கள் கூடியிருக்கும் காட்சியைக் கண்டு, பசுவைத் தேடிய கன்று போல் விரைந்து சென்று காலடியில் வீழ்ந்து வணங்கி, அருள் தர வேண்டினார்.
”அறை கூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பென்பு உருக ஓலமிட்டு” என்பார் மாணிக்கவாசகர்.
விண்ணவர் தேவர் மற்றவரிருக்க, குதிரை வாங்க வந்த வாதவூரரைத் திருப்பெருந்துறையில் சிவபெருமான் குருவாய்த் தோன்றி குருந்த மரத்தினடியில் அமர்ந்து தடுத்தாட்கொண்டு, தன் நீள் கழல்களைக் காட்டி ஸ்பர்ச, நயன, மந்திர தீட்சைகளை அளித்து மறைந்தார். வாதவூரரரை இறைவன் ‘மாணிக்கவாசக’ என அன்புடன் அழைத்தார்.
ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட, வாதவூரர், பாடிய முதல் அடி
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” .
அவ்விடத்தில், மதுரை மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டினார். பணத்தைத் திருப்பணிகளுக்கும், சிவனடியார்களுக்கும், மனத்தை சிவ வழிபாட்டிலும் கொடுத்த செய்தி கேட்ட மன்னன், மாணிக்கவாசகரைத் திரும்பி வருமாறு பணித்தான். மாணிக்கவாசகர் சிவன் கொடுத்த மதிப்பில்லா மாணிக்கமொன்றை அரசனிடம் அளித்து, “ஆவணித் திங்கள் மூல நாளில் குதிரைகள் வரும்” என்றார்.
பின்னர் அது பொய்யென்றறிந்த மன்னன், அவரைச் சிறையிலடைத்தான். சிவபெருமான் குதிரை வணிகனாகச் சென்று, நரிகளைப் பரிகளாக்கி அரசனிடம் கொடுத்தார். அவை, இரவில் மீண்டும் நரிகளாகி, மற்ற குதிரைகளையும் கடித்தன. இதனால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை சுடுமணலில் கல்லேற்றி நிறுத்தினான்.
ஆண்டவன் வாங்கிய பிரம்படி
இதையறிந்த இறைவன் வைகையைப் பெருக்கி, மதுரையை வெள்ளத்தில் அமிழ்த்தி அச்சுறுத்த, அரசன் கரையை அடைக்க மக்களை ஏவினான். சிவபெருமான் கூலியாளாக, வந்தி எனும் பிட்டு வாணிச்சிக்கு உதவ வந்து, பிட்டை வாங்கிக் கொண்டு, கரையை அடைக்காமல், உறங்கியதால் அரசனிடம் பிரம்படி பட்டார். அடித்த அடி, அண்ட சராசரங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் பட்டது. அடியாருக்காக அடி வாங்கிய இறைவன் வெள்ளத்தைக் குறைத்து மாணிக்கவாசகரின் பெருமையை உணர்த்தி, மறைந்தருளினார்.
உண்மையை உணர்ந்த மன்னனிடம் விடைபெற்ற அடிகள், மதுரையிலிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களைத் தரிசித்து, மனம் கசிய திருப்பதிகங்கள் பல பாடினார். திருவாசகத்தில் 51 பகுதிகள் உள்ளன. இவற்றுள் 20 பகுதிகள், திருப்பெருந்துறையில் பாடப் பட்டன. இலங்கையிலிருந்து வந்த புத்தர்களை வாதில் வென்று, இலங்கை மன்னனின் ஊமை மகளைப் பேசச் செய்தார். அவள் வாயிலாகப் புத்தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லவைத்தார்.
ஆன்மிக வரலாற்றுச் சிறப்புகள்
* இறைவன் மனிதனுக்குச் சொன்னது ‘பகவத்கீதை’ – பகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு அருளியது.
* மனிதன் இறைவனுக்குச் சொன்னது ’திருவாசகம்’ – மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டி எழுதியது.
* மனிதன் மனிதனுக்குச் சொன்னது – திருக்குறள் – திருவள்ளுவர் படைத்தது.
இத்தருணத்தில் வேழமுகத்தோன் விநாயகப்பெருமான், தன்னுடைய தந்தத்தை உடைத்து வேத வியாசருக்காக, மகாபாரதத்தை எழுதியதையும் நினைவு கொள்க.
கைச்சாத்து
திருவாசகப் பாடல்கள் அதுவரை ஏட்டில் எழுதப்படாமலிருந்தன. திருவாசகத்தின் தேனினுமினிய தீந்தமிப் பாக்களைக் கேட்டு சொக்கிய மதுரைக் கடவுள் சொக்கநாதர், இப்புண்ணிய பூமியில் அந்தணனாய் உருக்கொண்டு மணிவாசகரைக்கண்டு, பாடல்களை எழுதிக்கொள்ள வேண்டினார். மாணிக்கவாசகர் இசைந்தருள, அட்சர லட்சம் பெறும் ஒவ்வொரு பாக்களையும் தம் அருள்புரியும் திருக்கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதினார். பாவை பாடிய வாயால் கோவை பாடுமாறு மீண்டும் இறைவன் வேண்ட, அவரும் பாடினார். இறைவன் விடைபெற்று, ’மாணிக்கவாசகர் சொற்படி அழகிய சிற்றம்பலவன் எழுதியது’ எனக் கையொப்பமிட்டு, ஓலைச்சுவடிகளைத் தில்லைப் பொன்னம்பலத்தின் கருவறையில் பஞ்சாட்சரப்படியில் வைத்தார். மறுநாள் அடியார்கள் ஏட்டைக்கண்டு மாணிக்கவாசகரை அழைத்து பொருள் விளக்க வேண்ட, ”அம்பலவாணரே இதன் பொருள்” என்றருளினார். இறைவன் அருட்பேரொளியாகத் தோன்றி, அத்தாட்சி அளித்து மாணிக்கவாசகரைத் தம்மோடு சோதியில் இணைத்துக்கொண்டார். அன்று ஆனி மாமக நன்னாள்.
எவ்வுலகிலும், எக்காலத்திலும், எவருக்கும் இறைவன், தில்லைக்கூத்தன், இதுவரை கைச்சாத்து அளித்ததில்லை. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் திருவாசகத்தைக் கறந்த பால் கன்னலொடு, நெய் கலந்தாற்போல நமக்களித்த மாணிக்கவாசகர் ஒருவர் மட்டுமே, தாயிற்சிறந்த இறைவனால் கைச்சாத்துடன் நற்சான்றிதழ் பெற்ற மகாத்மா.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்
இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலைகள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச்சிலைகள் இங்கு இல்லையே தவிர, இக்கோவில், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத கணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங்களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலகணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடையார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட்டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவபுரம் என்றும் வழங்கப் பெற்றுள்ளது. தற்போது கோவிலின் பெயராலேயே, ஊரும் அழைக்கப்பட்டுவருகிறது.
கோவிலின் சிறப்பு
தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோகாம்பிகை
தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்
புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமானுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப்பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ளன. ஆவுடையாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம்மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணிக்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாராதனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித்திருமஞ்சனத் திருவிழா நடக்கிறது.
ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக்கோவில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள்ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில்களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகிகளும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பர்.
பஞ்சாட்சர மண்டபம்
மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ்சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் மேல் தளத்தில் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்துவாக்கள் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கரநாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத்தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்துடன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்தஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண்டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங்கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற்கூரையான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கையில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.
மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பதமுடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக்கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக்கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.
நூலின் மகிமை
மற்றெந்த நூலையும் படித்து, சிந்தித்து அவ்வாசிரியரின் மனத்தைப் படம் பிடித்து ஒரு கட்டுரை எழுதிவிடலாம். திருவாசகத்தை மட்டும் படித்துக் கொண்டே இருக்கத்தான் மனம் விழைகிறது. திருவாசகத்தைப் படித்தலும் கேட்டலும் எப்போதுமே ஒரு இனிய அனுபவமாக இருந்துவருகிறது. திருவாசகத்தைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து எழுதினால் பல புத்தகங்களாக நிரம்பிவிடும். பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் இக்கட்டுரை.
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” -
-வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் ஆளுடைய அடிகள் அருள்மாலை
மாணிக்கவாசகரின் உயர்ந்த பக்குவம்
மாணிக்கவாசகர் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டார். பணிவு, தன்னடக்கம், எளிமை ஆகியவற்றின் மறு உருவமாக இருந்தார். தன்னை நாயினும் கீழாகக் காட்டிக் கொண்டார்.
உதாரணங்கள்:
‘நாயினேனை நலமலி தில்லையுட்’
‘நாய்ச்சிவிகை ஏற்றினார்ப் போல’
“பிழைப்பு வாய்ப்பொன்று அறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி”
மேலும் ஒரு சாதாரண மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் வெளிக்காட்டி, பசி, தூக்கம், பெண் மயக்கம், ஆகியவற்றிலிருந்து தன்னை எப்படி இறைவன் காத்து, அருளினார் என்பதையும், மாயையிலிருந்து தன்னை விடுவிக்கும் படியும் மனமுருகி வேண்டிக் கொண்டார்.
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே”
“அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டோமே.”
“மண்ணி லேபிறந்(து) இறந்துமண் ஆவதற்(கு)
ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே”
அதேபோல், மறுபிறவியைக் கொடுத்து விடாதே எனவும் மறவாமல் கேட்டுக்கொண்டார். ஞானத்தைக் கொடுக்கும்படி கெஞ்சினார்.
கற்பனைக்கெட்டா வர்ணனை வளம் பெற்றவர் மாணிக்கவாசகர். இறைவனின் கருணையை வாழ்த்தும் அவருடைய பிரபலமான பாடல்:
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
பொதுவாக, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர். மாணிக்கவாசகர், அதற்கு மாறாக, ஞானம் கிடைத்தவுடன் அப்பேரின்பத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
“அருளதறிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரை புரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகம் ததும்ப
வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊந்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்ந்து நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது”
வீட்டுக்கொரு திருவாசகம் இருக்க வேண்டும். அன்பர்கள், மெய்யுருக்கும் திருவாசகத்தைப் படித்தின்புற்று மனம்கசிந்து மெய்ஞானப்பாதையில் முன்னேற தில்லைக்கூத்தன் அருள்புரிவாராக.